பூமிக்கு வாடகையாக நாம் மரக்கன்று நடவேண்டும்: விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்

நாம் வாழும் பூமிக்கு வாடகையாக அனைவரும் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.
பூமிக்கு வாடகையாக நாம் மரக்கன்று நடவேண்டும்: விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்

நாம் வாழும் பூமிக்கு வாடகையாக அனைவரும் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.
 வேலூர் பி.எம்.டி. ஜெயின் பள்ளியில் விதை பந்து திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:
 பூமியில் பிறந்த நாம் அனைவரும் கண்டிப்பாக மரக்கன்று நட வேண்டும். பொதுவாக நாம் குடும்பத்துடன் வெளியூர், சுற்றுலா தளங்களுக்குச் சென்றால் அங்குள்ள விடுதியில் தங்க பணம் அளிக்கிறோம். அதேபோல் நாம் இந்த பூமியில் நெடுங்காலம் வாழ்வதற்கு என்ன வாடகை செலுத்தி இருக்கிறோம் என நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு கைமாறாக அனைவரும் நாம் இருக்கும் பகுதியில் நிச்சயமாக மரக்கன்று நட வேண்டும். அதுவே நாம் இந்த பூமிக்கு செலுத்துகின்ற வாடகையாகும்.
 மரக்கன்று நடுவது நமக்காக அல்ல, எதிர்கால சந்ததியினர் தூய்மையான காற்றை சுவாசித்து நலமுடன் வாழத்தான் ஆகும். ஒருபுறம் மழை வெள்ளத்தால் மக்கள் உயிர் இழக்கின்றனர். மறுபுறம் தண்ணீறின்றி மக்கள் உயிரிழக்கின்றனர். காடுகளில் உள்ள யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியே வருகின்றன. அதற்கு காடுகளை அழித்து அங்கு மக்கள் குடியேறுவது அதிகரிப்பதே காரணமாகும். அரசு குறிப்பிட்ட சில நூறு மரங்களை வெட்ட அனுமதி அளித்தால் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுகின்றனர். இவை தடுக்கப்பட வேண்டும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததைப் போல் நாமும் இயற்கையை தெய்வமாக வணங்க வேண்டும். மாணவர்கள் தங்கள் பகுதியில் மரக்கன்று நடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அதை தங்களது நண்பர்களுக்கும் கற்றுத்தர வேண்டும் என்றார் அவர்.
 இந்த விதைப்பந்து திருவிழாவுக்கு விஐடி சார்பில் 25 ஆயிரம் விதைப்பந்துகள் அளிக்கப்பட்டன. முன்னதாக, பி.எம்.டி. ஜெயின் பள்ளியின் நிர்வாகி ராஜேஷ்குமார், உதவும் உள்ளங்கள் அமைப்பு நிர்வாகி சந்திர சேகர், பள்ளி மாணவர்கள், டி.கே.எம். மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com