தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கூடுதல் மலை ரயில் சேவை துவக்கம்

DIN


மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் 3 பெட்டிகளுடன் கூடுதல் மலை ரயில் சேவை துவங்குவதாக ரயில்வே நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பகுதி வழியாக மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் பலர் ரயிலில் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் டிசம்பர் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 3 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பகல் 1 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைகிறது. அங்கிருந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ( டிசம்பர் 9) மதியம் 1.30 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். 
இதில் முதல் வகுப்பில் 32 இருக்கைகள், 2 ஆம் வகுப்பில் 100 இருக்கைகள் என மொத்தம் 132 இருக்கைகள் உள்ளன. 
முதல் வகுப்பு கட்டணமாக ரூ.1100, 2 ஆம் வகுப்பு கட்டணமாக ரூ. 800 வசூலிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ரூ. 200-க்கு பரிசுப் பொருள் வழங்கப்பட உள்ளது. 
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறியதாவது: 
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்புக்கு ரூ.1100, 2 ஆம் வகுப்புக்கு ரூ. 800 வசூலிக்கப்படுகிறது. எனவே, இக்கட்டணத்திலேயே மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்று அங்கிருந்து மீண்டும் உதகை சென்று வர சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT