ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவிப்பு 

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 
ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவிப்பு 

புது தில்லி: ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானர்கள். அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. 

ஆலை மூடப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு   செய்து தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. வேதாந்தா குழுமத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. மேலும், அவர்களது கருத்தைக் கேட்க வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. 

ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. வேதாந்தா குழுமம் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டிருந்தாலும், ஆலையை மூடுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் நியாயப்படுத்தும் வகையில் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க பசுமைத் தீர்ப்பாயம் கருதுவதாக இருந்தால் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயம் அறிவித்துள்ளது. 

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் அறிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com