உமையாள்புரம் சிவராமனுக்கு இசைப் பேரறிஞர் விருது: தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

தமிழ் இசைச் சங்கம் சார்பில் இசைக் கலைஞர்கள் உமையாள்புரம் கா.சிவராமன், க.வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.


தமிழ் இசைச் சங்கம் சார்பில் இசைக் கலைஞர்கள் உமையாள்புரம் கா.சிவராமன், க.வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ் இசைச் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ் இசைச் சங்கத்தின் 76-ஆம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் டிசம்பர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் கா.சிவராமனுக்கு 63-ஆம் இசைப் பேரறிஞர் விருதும், திருமுறை இசைத் துறையில் புகழ்பெற்ற பழநி க.வெங்கடேனுக்கு 10-ஆவது பண் இசைப் பேரறிஞர் விருதும் வழங்கப்பட உள்ளது.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு இருவருக்கும் விருதுகள், வெள்ளிப்பேழை, பொற்பதக்கம், பரிசுத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com