எட்டயபுரத்தில் ஊர்வலம்

விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதி அன்பர்களின் ஊர்வலம்
எட்டயபுரம் பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணிமண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக வந்த கல்லூரி மாணவிகள்
எட்டயபுரம் பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணிமண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக வந்த கல்லூரி மாணவிகள்


விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதி அன்பர்களின் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாரதியின் வீட்டில் இருந்து நினைவு மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
மகாகவி பாரதியின் 137ஆவது பிறந்த நாளையொட்டி, எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லத்தில் உள்ள அவருடைய சிலைக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. 
தொடர்ந்து எட்டயபுரத்தில் கூடிய பாரதி அன்பர்கள் பாரதியார் மணிமண்டபத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
கார்த்திகை வீதி, வடக்கு ரதவீதி, பெருமாள் கோயில் தெரு, தூத்துக்குடி-கோவில்பட்டி நெடுஞ்சாலை வழியாக இப்பேரணி மணிமண்டபத்தை அடைந்ததும் அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து பாரதி அன்பர்கள் மரியாதை செலுத்தினர்.
எட்டயபுரம் தமிழ் பாப் திஸ்து, எட்டயபுரம் வீரபாகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். கோவில்பட்டி ஜி. வெங்கடசாமி நாயுடு கலை, அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.துரைசாமிநாடார் மாரியம்மாள் கல்லூரி, நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, நாகலாபுரம் மனோ கல்லூரி மாணவர்கள், கே.ஆர். கலைஅறிவியல் கல்லூரியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் பாரதியாரின் படங்களை ஏந்தியும், பாடல்களைப் பாடியபடியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தில் நல்லி குப்புசாமி செட்டியார், தினமணியின் மகாகவி பாரதியார் விருதுபெற்ற சீனி.விஸ்வநாதன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன், சிங்கப்பூர் முஸ்தபா, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர் யுகபாரதி, ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், கிருங்கை சேதுபதி, இளசை மணியன், கவிஞர் அமுதபாரதி, ராசி ராமலிங்கம், ராமநாதபுரம் தமிழ்ச்சங்கச் செயலர் மருத்துவர் சந்திரசேகரன், வ.உ.சி.யின் பேரன் பா.முத்துக்குமாரசாமி, கவிதா பப்ளிகேஷன் சொக்கலிங்கம், அருணன், வைகை இலக்கிய கழகம் மு.சிதம்பர பாரதி, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கோ.பெரியண்ணன், செயலர் இதயகீதம் ராமானுஜம், பொருளாளர் பே.கி.பிரபாகரன், புதுச்சேரி கிளைச் செயலர் முனைவர் வேல் கார்த்திகேயன், பொருளாளர் கோ. குணசேகரன், விழுப்புரம் கிளை துணைச் செயலர் வேல்மகேஸ்வரி, புதுச்சேரி பேராசிரியர் மு.கண்ணன், மும்பை முனைவர் வதிலை பிரதாபன், ராமச்சந்திரன், வேலூர் கிளை நிர்வாகி கருணாநிதி, அமைப்பாளர் கருணாகரன், பேராசிரியர் ஜெகதீசன், அவை முன்னவர் மாம்பலம் சந்திரசேகர், பேராசிரியர் ராமகுருநாதன், முனைவர் வாசுகி கண்ணப்பன், துணைத் தலைவர் கண்ணன் விக்ரமன், புதுவை தேசியமணி ராமசாமி, உரத்த சிந்தனை வாசகர் வட்ட துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன், தலைவர் உதயம் ராம், கோவில்பட்டி வட்டத் தலைவர் சிவானந்தம், ஜீவராசி அறக்கட்டளை தலைவர் ராசி ராமலிங்கம், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் அ.தேவராஜ், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கப் பொருளாளர் ஞானசைமன், நிர்வாகச் செயலர் மோகனன் பெருமாள், ஈரோடு தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம், 
ஓய்வு பெற்ற தெற்கு ரயில்வே துணை நிதி ஆலோசகர் திருச்சி பாண்டியன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகள், ஓவியர் வள்ளிநாயகம், கவிஞர் பே.ராஜேந்திரன், எழுத்தாளர் சோ.தர்மன், உலகத் திருக்குறள் பேரவை மாவட்டச் செயலர் அன்பழகன், சைவ நெறி காந்தி, உமறுப்புலவர் சங்கத் தலைவர் ஹாஜாமைதீன், சமரச சுத்த சன்மார்க்க சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், செண்பகமாறபாண்டியன், பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி, பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ, ஆசிரியை கனகா, ரவி சுப்பிரமணியன், புதுச்சேரி ராமலிங்கம், இளந்தமிழர் இன்பரசு, எட்டயபுரம் சுப்புசாமி, பாரதி இல்ல முன்னாள் காப்பாளர் மோகன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com