மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும்: நெடுமாறன்

மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும்: நெடுமாறன்

மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
2018-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் ஓர்  உண்மையை உணர்த்தியிருக்கிறது. 
காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு அகில இந்தியக் கட்சிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் முடிவே இத்தேர்தல் என்று கருதினால் அது தவறானது. மாநிலக் கட்சிகளின் உதவியின்றி எந்த அகில இந்தியக் கட்சியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற உண்மையை மட்டுமல்ல, அகில இந்தியக் கட்சிகளை மாநிலக் கட்சிகளால் வீழ்த்தவும் முடியும் என்ற உண்மையையும் இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியும் அண்மையில் நடந்த சட்டப் பேரவைத்  தேர்தலில் பெற்ற வெற்றிகள் இந்த உண்மையை எடுத்துக் காட்டியுள்ளன. மேற்கண்ட இரு மாநிலங்களிலும் காங்கிரஸூம், பாஜகவும் வலுவான கூட்டணிகளை அமைத்துப் போட்டியிட்ட போதிலும், அவற்றை மாநிலக் கட்சிகள் தோற்கடித்து பெரும் வெற்றி 
பெற்றுள்ளன. காங்கிரஸ் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் வலிமையாக இல்லாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே,  2019-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக உருவாக்கும் தேர்தலாக அமைய உள்ளது. மாநிலக் கட்சிகள் தொலைநோக்குப் பார்வையுடனும், கொள்கை உறுதியுடனும் இயங்கினால் மேற்கண்ட கோட்பாட்டிலும், தேர்தலிலும் வெற்றிபெற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com