ரஃபேல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தடுமாற்றம்: பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுக்களை அவசர கோலத்தில் அள்ளித்தெளித்த எதிர்க்கட்சிகள், மீண்டும் தங்களின் அவசரத்தை,

ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுக்களை அவசர கோலத்தில் அள்ளித்தெளித்த எதிர்க்கட்சிகள், மீண்டும் தங்களின் அவசரத்தை, அலட்சிய போக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீதான விமர்சனத்தில் வெளிப்படுத்தியுள்ளன என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை விட தங்களின் அரசியல் அதிகாரம் குறித்த கவலையையே இவைகளின் விமர்சனங்கள்  பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தில், அரசு  தவறான தகவலை கொடுத்ததாக கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் முழுமையான தகவல் அறியாமல் அல்லது அறிந்து கொண்திருந்தால், அரசியல்  உள்நோக்கத்தோடு  மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உச்சநீதி மன்றம் உத்தரவில், "ரஃபேல் விலை விவரங்கள் தலைமை கணக்கு அதிகாரியிடம் (சிஏஜி) பகிர்ந்து கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை பொது கணக்கு குழுவினால் ஆராயப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட அறிக்கையே பாராளுமன்றத்திலும், பொது தளத்திலும் முன்வைக்கப்பட்டது".

அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,"சிஏஜியுடன் ரஃபேல் விலை குறித்த விவரங்களை அரசாங்கம் பகிர்ந்து கொண்டுள்ளது. சிஏஜி அறிக்கைக்கு பின் பொது கணக்கு குழுவினால் ஆராயப்படுகிறது. திருத்தம் செய்யப்பட்ட அறிக்கையே பாராளுமன்றம் மற்றும் பொது தளத்தில் முன்வைக்கப்பட்டது" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பொது கணக்கு குழுவின் ஆய்வுக்கு செல்லும் என்பதே நடைமுறை, என்பதையே தங்களின் மனுவில் கூறியிருப்பதை தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் என்பதை எடுத்துரைத்து, பொது கணக்கு குழுவினால் ஆராயப்பட்டது என்று தவறுதலாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி சிறிய திருத்தத்தை கேட்டுள்ளது. 

அதற்குள் வழக்கம் போல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசு உச்சநீதிமன்றத்தில் பொய் சொல்லிவிட்டது என்று கூச்சலிட்டு மக்களை குழப்பும் வேளையில் ஈடுபட்டது. எதையும் ஒழுங்காக படிக்காமல், ஆராயாமல், தேவையற்று, அவசர அவசரமாக மோடி வெறுப்பு, பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்படும் கட்சிகள் பொறுப்பையுணர்ந்து தங்களின் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள் என்றார் நாராயணன் திருப்பதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com