தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் -  உச்சநீதிமன்றம்

ENS

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு கழிவுகளை சேமிப்பதற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், 2013-இல் அணு கழிவுகளை சேகரிப்பதற்கான போதுமான வசதியை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 5 ஆண்டு கால அவகாசத்தை வழங்கியது. மேலும், உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த போதிய பாதுகாப்பு வசதிகளையும் 5 ஆண்டு காலத்துக்குள் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

உச்சநீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டுகால அவகாசம் மே 2018-இன் படி காலாவதி ஆனது. ஆனால், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய அணுமின் சக்தி கழகம் சார்பில் செயல்படுத்தவில்லை. 

இதையடுத்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பூவுலகின் அமைப்பு சார்பில் ஆஜராக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அணு கழிவை உலை வளாகத்திலேயே சேமித்து வைப்பதின் விளைவுகளை எடுத்துரைத்தார். அதற்கு உதாரணமாக, அணு கழிவை சேகரிக்க பிரத்யேகமான பாதுகாப்பு வசிதியை மேற்கொள்ளாமல் இருந்ததால் ஜப்பான் ஃபுகுஷிமா அணுமின் நிலையம் விளைவித்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை நினைவுபடுத்தினார்.  

அதனால், அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் அல்லது அணுமின் நிலையத்தின் சுற்றுவட்டார பகுதி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்த குறிப்பிட்ட பாதுகாப்பு வசதியை அரசு செயல்படுத்தும் வரை தற்காலிகமாக மூட உத்தரவிட வேண்டும் என்று தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு எடுத்துரைத்தார். மேலும், நிலத்துக்கு அடியில் மிகவும் ஆழமான இடத்தில் கதிரியக்க எரிபொருளை சேமிக்க இடம் அமைக்காமல் அணுமின் நிலையத்தை தொடர்ந்து இயக்குவது பேரழிவுக்கு அழைப்பு விடுவதாகும் என்றார் பூஷண்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சேமிப்பு வசதியை அமைப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30, 2022 வரை நீட்டிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றை சமர்பித்திருந்தார்.   

அதன் அடிப்படையில், அணு கழிவை சேமிப்பதற்கான வசதியை அமைக்க ஏப்ரல் 2022 வரை கால அவசகாசத்தை நீட்டித்து, அதனை அமைப்பதற்கு இந்திய அணுமின் சக்தி கழகத்துக்கு கடைசி வாய்ப்பை வழங்குவதாக தீபக் மிஸ்ரா அமர்வு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட கோரிய மனுவையும் தீபக் மிஸ்ரா அமர்வு நிராகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT