தமிழ்நாடு

கால்நடை மருத்துவக் கலந்தாய்வு: ஜூலை 24 -இல் தொடக்கம்

DIN

தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 24 -ஆம் தேதி தொடங்க உள்ளது.
அழைப்புக் கடிதம்: சென்னை வேப்பேரியில் உள்ள, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tanuvas.ac.in,  www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்: இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.
மொத்த இடங்கள்: கால்நடை மருத்துவம் -கால்நடை பராமரிப்பு படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.
ஒதுக்கீடு எவ்வாறு? கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் படிப்பில் உள்ள 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் அதாவது 54 இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 306 இடங்களில் 18 இடங்கள் தொழில்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்கள், விளையாட்டுப் பிரிவில் 5 இடங்கள் (3 ஆண்கள், 2 பெண்கள்), முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படும்.
பி.டெக். ஒதுக்கீடு: மூன்று பி.டெக் படிப்புகளிலும் தலா ஒரு இடம் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், ஒரு இடம் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்படும். மூன்று படிப்புகளிலும் 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் 15 சதவீதம் அதாவது 6 இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும்.
கலந்தாய்வு தொடக்கம்: இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 3 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து கலந்தாய்வு அட்டவணையை பல்கலைக்கழக சேர்க்கைக் குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT