டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை: அரசு, தனியார் மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை ஆலோசனை

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பொது சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பொது சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 22,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 65 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் டெங்கு பாதிப்பில் தமிழகம் முன்னணியில் இருந்தது. இதன் காரணமாக நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த பொது சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள், நிறுவனங்கள் சுகாதாரமற்ற வகையில் இருந்தால் அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொது சுகாதாரத் துறையின் மண்டல வாரியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை செய்யும்போது, கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி டெங்கு காய்ச்சலுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, சென்னை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்திலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லுôரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் காய்ச்சல் வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com