ஒகேனக்கல்லில் அருவியை மூழ்கடித்த வெள்ளம்: வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர்வரத்து

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவியையே மூழ்கடித்துக் கொண்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
ஒகேனக்கல்லில் அருவியை மூழ்கடித்த வெள்ளம்: வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர்வரத்து

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவியையே மூழ்கடித்துக் கொண்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1லட்சம் கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கா்நாடக காவிரி நீா்பிடிப்புப் பகுதி மற்றும் கேரளாவின் வயநாடு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து நொடிக்கு 40 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஐ சாகா் அணையிலிருந்து நொடிக்கு 60ஆயிரம் கன அடிநீா் என 1 லட்சம் உபரி நீா்  திறந்துவிடப்பட்டுள்ளது. 

கா்நாடக அணைகளில் திறந்துவிடப்பட்ட உபரி நீர் நேற்று மாலை 5மணியளவில் ஒகேனக்கல் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி நொடிக்கு 80ஆயிரம் கன அடிநீா் வந்துக்கொண்டிருந்தது.

இன்று காலை 11மணி நிலவரப்படிநொடிக்கு 1 லட்சம் கன அடியாக நீா்வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவி செல்லும் நடைபாதை மற்றும் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினா் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் அருவில் குளிக்கவும்,பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிா்வாகம் 8-வது நாளாக தடைவிதித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனியாா் விடுதிகளில் தங்க அனுமதிக்ககூடாது என விடுதி உரிமையாளா்களிடம் காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் பொது இடங்களில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளிலிருந்து வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com