தமிழ்நாடு

குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர்க் கண்காட்சி

தினமணி

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை தோட்டக்கலை கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.
 குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக் கலைத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தோட்டக் கலை கண்காட்சி திறப்பு விழாவுக்கு அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை வகித்தார். எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தோட்டக் கலை கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்துவைத்தார்.
 கண்காட்சியில் பல்வேறு வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்ட நடன மங்கைகள், மிக்கி மவுஸ் கார்ட்டூன் உருவம், பல்வேறு விலங்குகளின் உருவங்கள், காய்கனிகளாலான டிராகன், மீன், மயில், மான், குரங்கு, கோழி, முதலை, அணில், வண்ணத்துப்பூச், கடல் குதிரை, நெருப்புக்கோழி, பருந்து, குதிரை, சேவல், எருமை, அன்னப்பறவை ஆகியவற்றின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், வாசனை திரவிய பொருள்களாலான தாஜ்மஹால் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வேளாண் அறிவியல் மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், ராக்கெட்டுகளின் அணிவகுப்பு, ஒலி, ஒளி கண்காட்சி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் வனத் துறையினரால் சிறுத்தை, மர அணில், கரடி போன்ற காட்சிப் பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, குழந்தைகளுக்கு ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சலுகை கட்டணம் வசூலிக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர். கண்காட்சி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., இன்பதுரை எம்.எல்.ஏ., தாய்கோ வங்கி துணைத் தலைவர் குற்றாலம் என்.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT