தமிழ்நாடு

குற்றாலப் பேரருவியில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை

DIN

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த தொடர் சாரல் மழை காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் அவ்வப்போது லேசான சாரலுடன், மேகமூட்டமாகவும், குளிர்ந்த காற்றும் நிலவியது. எனினும், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஐந்தருவியில் சிறிய கற்கள், மரக்கட்டைகள் தண்ணீருடன் சேர்ந்து விழுந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
மாலையில் குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி, பாதுகாப்பு வளைவின் மீது கொட்டியது. இதையடுத்து, குற்றாலம் பேரருவியிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. ஐந்தருவியில் தண்ணீரின் சீற்றம் குறையத் தொடங்கியதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை காலை முதல் அவ்வப்போது சாரல் மழையும், லேசான வெயிலும் மாறிமாறி நிலவியது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த அளவிலேயே இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT