தமிழ்நாடு

போலீஸாருக்கு சிக்னலுடன் இணைந்த "பயோ டாய்லெட்'

DIN

இந்தியாவில் முதல்முறையாகப் போக்குவரத்து போலீஸாருக்காக சிக்னலுடன் இணைந்த "பயோ டாய்லெட்' வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
 கோவை, அவிநாசி சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி சிக்னலில், நாட்டிலேயே முதல்முறையாகப் போக்குவரத்து போலீஸாரின் வசதிக்காக ரூ. 4 லட்சம் மதிப்பிலான "பயோ டாய்லெட்' அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த டாய்லெட், பார்க் தகவல் தொழில்நுட்பக் குழுமத்தின் "பாத்பைண்டர்' நிறுவனம் சார்பில் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பார்க் தகவல் தொழில்நுட்பக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ஜேசுதாஸ் முயற்சியால் இந்த "பயோ டாய்லெட்' அமைக்கப்பட்டுள்ளது.
 புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த "பயோ டாய்லெட்டை' போக்குவரத்துத் துணை ஆணையர் சுஜித்குமார் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
 இதுகுறித்து, பார்க் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் முரளிதரன் கூறியதாவது:
 இந்த "பயோ டாய்லெட்டுக்கு' அதிகப்படியான தண்ணீர் தேவைப்படாது. இந்த டாய்லெட்டை 3 ஆண்டுகளுக்கு எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. எருசாணம் மட்டும் உபயோகப்படுத்தி தொடர்ந்து இந்த டாய்லெட்டை உபயோகப்படுத்த முடியும். இதற்காக சாலையில் எவ்விதக் குழிகளும் தோண்டப்படவில்லை. இந்த "பயோ டாய்லெட்' பாதுகாப்பானது, சுகாதாரமானது ஆகும். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீஸாருக்கு பல்வேறு சிக்னல்களில் "பயோ டாய்லெட்' அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT