தமிழ்நாடு

ஆபத்தான கட்சியா பாஜக?

DIN

பாஜகவை ஆபத்தான கட்சியாக பலர் நினைக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
 சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் திங்கள்கிழமை அளித்த பதில்கள்: தமிழகத்தில் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
 பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாகச் செயல்படுத்தவில்லை. அதை அமல்படுத்திய விதம் தவறு. விரிவான ஆய்வுக்குப் பின்னரே அமல்படுத்தியிருக்க வேண்டும்.அதைப் பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது.
 பாஜகவை ஆபத்தான கட்சி என நிறைய பேர் நினைக்கின்றனர். பலர் அவ்வாறு நினைக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக பாஜக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும் என்றார் அவர்.
 எந்த 7 பேர்?: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எந்த ஏழு பேர்? அது குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன் எனப் பதிலளித்தார் ரஜினிகாந்த்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT