ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் நாளை செல்கிறது ஜி.எஸ்.எல்.வி.-மாக்3 ராக்கெட்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜி.எஸ்.எல்.வி. - மாக் 3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) புதன்கிழமை (நவ.14) விண்ணில் ஏவ உள்ளது.
ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் நாளை செல்கிறது ஜி.எஸ்.எல்.வி.-மாக்3 ராக்கெட்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜி.எஸ்.எல்.வி. - மாக் 3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) புதன்கிழமை (நவ.14) விண்ணில் ஏவ உள்ளது.
 அதிக எடையைத் தாங்கிச் செல்லக்கூடிய இந்த ராக்கெட் மூலம் ஜிசாட்-29 என்ற உயர்தர இணைய வசதிக்கான தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
 மூன்றாவது மாக்-3 ராக்கெட்: இஸ்ரோ சார்பில் புதன்கிழமை அனுப்பப்படுவது மாக்-3 ரக மூன்றாவது ராக்கெட் ஆகும். கடந்த 2009-ஆம் ஆண்டு மாக்-3 ராக்கெட் தயாரிக்கும் பணியை இஸ்ரோ தொடங்கியது. இது இஸ்ரோ உருவாக்கியவற்றிலேயே அதிக எடையைச் சுமந்து செல்லும் ராக்கெட்டாகும். சுமார் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
 இந்த ராக்கெட் முதன்முறையாக 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை முறையில் ஏவப்பட்டது. அப்போது, விண்வெளிக்கு ஆட்களை தாங்கிச் செல்லக் கூடிய 3.7 டன் எடை கொண்ட விண்கலத்துடன் இந்த மாக்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2017 ஜூன் மாதத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் மூலம் முதன்முறையாக 3136 கிலோ எடை கொண்ட ஜிசாட்-19 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது, மேம்படுத்தப்பட்ட உயர் வேக இணையதள வசதியை தரக்கூடிய 3,500 கிலோ எடைகொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள் இந்த மாக்-3 டி2 ராக்கெட் மூலம் புதன்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளது.
 இதன் மூலம், கிராம வள மையங்கள் வழியாக கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி மேம்பாடு அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (நவ.14) மாலை 5 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com