பாஜக-வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைப்பு: மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினர்.
பாஜக-வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைப்பு: மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினர்.

கடந்த 9-ஆம் தேதி மு.க.ஸ்டாலினுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்த நிலையில், இன்று சீதாராம் யெச்சூரி சந்தித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

அப்போது, திமுக எம்பி கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அகில இந்திய அளவில் பாஜக-வுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள சூழலில், அதுதொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்ததாகக் கூறினார். 

மத்தியில் ஆளும் பாஜக அரசு வருகிற தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com