பொதுப்பணித்துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.2 கோடி அபராதம்: உயர் நீதிமன்றம் தடை

தமிழக பொதுப்பணித்துறை முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை, ஆக்கிரமிப்பை அகற்றுவதில் மெத்தனப்போக்கை கையாண்டு வருவதாகக் கூறி 2 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பொதுப்பணித்துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.2 கோடி அபராதம்: உயர் நீதிமன்றம் தடை

அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக பராமரிப்பது தொடர்பாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது 26,300 ஆக்கிரமிப்புகளில், 408 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக இதர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை எனவும் பொதுப்பணித்துறை தெரிவித்தது.

அதை ஏற்க மறுத்து, தமிழக பொதுப்பணித்துறை முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை, ஆக்கிரமிப்பை அகற்றுவதில் மெத்தனப்போக்கை கையாண்டு வருவதாகக் கூறி 2 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக பொதுப்பணித் துறைக்கு ரூ2 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com