வேகத்தை அதிகரித்த கஜா புயல்: நாகைக்கு 510 கி.மீ தொலைவில் மையம்

கஜா புயல் சென்னையின் தென்கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கஜா புயல் சென்னையின் தென்கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பாம்பன் - கடலூர் இடையே நாளை (வியாழக்கிழமை) கரையைக் கடக்க இருக்கும் கஜா புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகிறது. முன்னதாக, மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல் 10 கி.மீ வேகமாக அதிகரித்தது. பின்னர், மணிக்கு 12 கி.மீ வேகமாக அதிகரித்தது. படிப்படியாக வேகத்தை அதிகரித்து வந்த கஜா புயல் தற்போது மணிக்கு 13 கி.மீ வேகமாக அதிகரித்து மேற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. 

இந்தப் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரமடைந்து சீற்றத்துடன் நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com