பலமானவர்களா? பலவீனமானவர்களா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

பலமானவர்களா? பலவீனமானவர்களா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பலமானவர்களா? பலவீனமானவர்களா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

பலமானவர்களா? பலவீனமானவர்களா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். 2021ல் தான் சட்டப்பேரவை தேர்தல் வரும், பாராளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தல் வரும் என ஸ்டாலின் எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார். 

தேர்தல் நேரத்திலேயே கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும். கமல் தனக்கு பிரபலம் தேடுகிறார். அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்பதே கமலின் ஒரே எண்ணம். திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள். 

திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துக்களை பரப்பினார், ஆனால் இப்போது டாடி, மம்மி வீட்டில் இல்லை என பாடுகிறார்கள். பலமானவர்களா? பலவீனமானவர்களா? என்பதற்கு தேர்தலே விடை, மக்கள்தான் தீர்மானிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

ஒருவருக்கு எதிராக 10 பேர் சேர்ந்தால், அந்த ஒருவரே பலசாலி என பாஜக குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com