தமிழ்நாடு

கஜா புயல் மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

DIN


கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே இன்று வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் கடும் கொத்தளிப்புடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பும். கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து புயல் அபாயம் உள்ள நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எண்ணூர், பாம்பன், கடலூர் மற்றும் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி, சென்னைக்கு  தென்கிழக்கே  370 கி.மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே  370 கி.மீட்டர் தொலைவிலும் கஜா புயல் உள்ளது. மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல், 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவில் கரையைக்கடக்கும். 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT