தமிழ்நாடு

கஜா புயல்: சென்னையில் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை 

DIN

கஜா புயல் காரணமாக சென்னை மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் இடையே இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கஜா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயல் இன்று கரையைக் கடக்கவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பிற்பகல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் உத்தரவின்படி இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT