கரையைத் தொட்டது கஜா புயலின் வெளிப்பகுதி: வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையைத் தொட்டு விட்டது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
கரையைத் தொட்டது கஜா புயலின் வெளிப்பகுதி: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கஜா புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையைத் தொட்டு விட்டது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கஜா புயலானது இன்று இரவு நாகை மற்றும் வேதாரண்யம் இடையே இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்க உள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கஜா புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையைத் தொட்டு விட்டது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

கஜா புயலானது தற்போது நாகப்பட்டிணத்திலிருந்து கிழக்குத் திசையில் 138 கிமீ  தொலைவில் நிலை கொண்டுள்ளது தற்போது மணிக்கு 10 கிமீ வேகத்தில் புயலானாது நகர்ந்து வருகிறது. 

தற்போது புயலின் புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையை தொட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 20 கிமீ நீளமுள்ள புயலின் கண் பகுதி மற்றும் பின் பகுதி ஆகியவையும் கரையைக் கடக்கும். 

அப்போது காற்றின் வேகமானது மிகவும் அதிகமாக இருக்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com