தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தலைநகர்
தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை


சென்னை: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே இன்று வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் கடும் கொத்தளிப்புடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பும். கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும் கஜா புயல் உள்ளது. மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல், 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவில் கரையைக்கடக்கும். 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா, எழும்பூர், அடையாறு, சாந்தோம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, வில்லிவாக்கம், பெரம்பூர், அரும்பாக்கம் ராயப்பேட்டை, பாலவாக்கம் கொட்டிவாக்கம், பெசண்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இதுபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் எதிரொலியால் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் காலை முதல் லேசான காற்றுடன் வானம் கருத்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. ஓரிரு இடங்களில் அதிக காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com