பழுது பார்ப்பதற்காக திருச்சி சென்ற மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் வந்தடைந்தது

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து மலை ரயில் என்ஜின் பழுது பார்க்கப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
பழுது பார்ப்பதற்காக திருச்சி சென்ற மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் வந்தடைந்தது

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து மலை ரயில் என்ஜின் பழுது பார்க்கப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

உதகை மலை ரயிலின் நீராவி என்ஜின், பழுது பார்க்கும் பணிக்காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு 2017 ஜூலை மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பழுது பார்க்கப்பட்டப்பின் ரயில் என்ஜின் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு கனரக வாகனத்தில் ஏற்றப்பட்டு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வாகனம் புதன்கிழமை பகல்1 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மலை ரயில் என்ஜினை இறக்கி வைப்பதற்காக ஈரோட்டில் இருந்து 140 டன் எடை கொண்ட ராஜாளி கிரேன் கொண்டுவரப்பட்டது. அதன்பின் 55 டன் எடை கொண்ட ரயில் என்ஜின் கிரேன் மூலம் பி.எப்.யு வேகனில் இறக்கி வைக்கும் பணி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. 

கோவை ரயில்வே உதவி மெக்கானிக்கல் என்ஜினீயர் தீக்சாசௌத்ரி, கோச் பொறியாளர் முகமதுஅஷ்ரப், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை சீனியர் செக்ஷன் இன்ஜினியர் கணேஷ்மோகன், கிரேன் பொறுப்பாளர் ஜிதேந்தர்சவுகான் ஆகியோர் மேற்பார்வையில் கிரேன் ஆபரேட்டர் இர்ஷாத்அகமது கிரேனை இயக்க ரயில் என்சின் பி.எப்.யு.வேகனில் ரயில்வே தொழிலாளர்கள் உதவியுடன் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மதியம் 3 மணிக்கு தொடங்கிய பணி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் புதிய நீராவி என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே புதிய நீராவி என்ஜினுடன்மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com