தமிழ்நாடு

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

DIN


சென்னை: கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று இரவு நாகைக்கு அருகே கரையைக் கடந்தது. இதனால், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, கஜா புயல் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் நாகைக்கு அருகே கரையைக் கடந்தது. அப்போது 110 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக பதிவாகியுள்ளது. இதனால் நாகை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

புயல் மற்றும் கன மழையால் 11 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

கஜா புயல் கரையைக் கடந்து தற்போது திண்டுக்கல் பகுதியில் நிலவி வருகிறது. பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கஜா புயல் வருவது குறித்து ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதி, குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை நின்ற பிறகு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செய்யப்படும். நிவாரண முகாம்களில் 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன்.

புயல் மற்றும் கன மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT