தமிழ்நாடு

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு 26 ஆக உயர்வு

DIN


சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் மற்றும் கன மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். அதிராம்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவரும், குறிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி ஒருவரும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மரம் விழுந்ததில் எலிசபெத் ராணி என்பவரும் உயிரிழந்தார்.

திருவாரூரில் குடவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ராமகிருஷ்ணன் என்பவரும், கோவில்வெண்ணி பகுதியில் கனகவள்ளி என்பவரும் உயிரிழந்தனர்.

வேதாரண்யத்தில் இன்று அதிகாலை புயல் தாக்கியதில், சுப்பையன் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இதே போல கோடியக் கரையில் வடுகநாதன் என்பவரும், தலைஞாயிறு பகுதியில் பாப்பு என்ற பெண்ணும்  உயிரிழந்தனர். வேதாரண்யம் பகுதியில் கஜா புயலுக்கு பலியானேர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.

இதுவரை கஜா புயல் மற்றும் கன மழைக்கு தமிழகத்தில் 26 பேர் ர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT