கார்த்திகை தீபம்: சென்னை- திருவண்ணாமலை இடையே 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கார்த்திகை தீபத் திருவிழா நவ.23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக


கார்த்திகை தீபத் திருவிழா நவ.23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வர். குறிப்பாக சென்னை, திருச்சி, விழுப்புரம், வேலூர், புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சுமார் 3,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னை கோயம்பேட்டில் இருந்து 750 சிறப்புப் பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகள் வரும் 22, 23-ஆம் தேதிகளில் மக்களின் தேவைக்கேற்ப இயக்கப்படும். இந்தப் பேருந்துகளுக்கு முன்பதிவு எதுவும் இல்லை. மக்கள் கூட்டம் அதிகரித்தால், சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com