தமிழ்நாடு

கஜா நிவாரணம்: வரும் வியாழனன்று  பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி 

DIN

சென்னை: கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி வரும் வியாழனன்று தில்லி செல்ல உள்ளதாக தவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய 'கஜா' புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏறட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், பல்லாயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது மாநிலத்தின் பெரும்பாமையான பகுதிகளில் முழுமையான அளவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி வரும் வியாழனன்று தில்லி செல்ல உள்ளதாக தவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுதினம் (20-ஆம் தேதி) நேரில் பார்வையிட உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.  அந்த பகுதிகளை ஆய்வு செய்து தகவல்களை சேகரித்த பின், விரிவான அறிக்கையுடன் அவர் தில்லி செல்ல உள்ளதாகத் தெரிகிறது.

கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் கோருவதுடன், பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவிக்கவும் முதல்வர் கோரிகை வைக்கவுள்ளதாகத் தெரிகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT