தமிழ்நாடு

கஜா பாதித்த பகுதிகளில் மூன்று நாட்களில் முழுமையாக மின் இணைப்பு: அமைச்சர் தங்கமணி 

DIN

புதுக்கோட்டை: கஜா புயலினால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மூன்று நாட்களில் முழுமையாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய 'கஜா' புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏறட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், பல்லாயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது மாநிலத்தின் பெரும்பாமையான பகுதிகளில் முழுமையான அளவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கஜா புயலினால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மூன்று நாட்களில் முழுமையாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்த பிறகு அவர் கூறியதாவது:

கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள நகர்பகுதிகளுக்கு இன்னும் இரண்டு தினங்களிலும், கிராமப்புறங்களுக்கு மூன்று அல்லது நான்கு தினங்களில் மின் இணைப்பு வழங்கப்படும்.
நிவாரணப்பணிக்கு கூடுதலாக ஆந்திராவில் இருந்து 1,000 பணியாளர்கள் நாளை வருகின்றனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஞாயிறு மாலைக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும். நகர் முழுவதும் முழுமையாக 5 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும்

அதேபோல புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக மூன்று  நாட்களில் மின் இணைப்பு கொடுக்க போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சீரமைப்பு பணிக்கு மின்கம்பங்களும், கூடுதல் மின்மாற்றிகளும் கைவசம் இருக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT