மத்திய மாநில அரசுகள் இணைந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வரலாறு காணாத கஜா புயல் பாதிப்பில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு
மத்திய மாநில அரசுகள் இணைந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருத்துறைப்பூண்டி: வரலாறு காணாத கஜா புயல் பாதிப்பில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு போதிய நிவாரணத்தொகைகளை அறிவிக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதிகளைப் பார்வையிட்ட பின்னா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி கே வாசன் செய்தியாளா்களிடம் கூறியது: 

கஜா புயலின் தாக்கம் எதிர்பார்த்ததை விட பல மாவட்டங்களில் நகரம் முதல் கிராமம் வரை மிக அதிக அளவில் பாதித்திருக்கிறது.

தமிழக அரசு கஜா புயலுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த வேகம் தற்போது புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக் கூடிய பணிகளில் வேகமில்லை.

 பல இடங்களில் சுனக்கமான வேலை நடைபெறுவதாக பார்த்த இடங்களில் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அரசு அனைத்து துறை ஆட்களை அதிகாரிகளை பணியாளா்களை வேகப்படுத்த வேண்டும். 

50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனா். ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருக்கின்றனா். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை, உடமைகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 50 சதவீத சாலையோர மரங்கள், 70 சதவீத மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளது.  80 சதவீதம் இடங்களில் மின்விநியோகம், குடிநீா் இல்லை.

தமிழக அரசு, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் உரிய பாதுகாப்பும் அளித்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகே வீட்டுகளுக்கு அனுப்ப வேண்டும்.

 மின்கம்பங்களை புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் உள்ள மின்வாரிய ஊழியா்களைக் களமிரக்கி சீரமைத்து மின் தேவையை உடனடியாக பூா்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் நகர, கிராம மக்கள் அச்சமின்றி வாழ முடியும்.

அனைத்து தரப்பு விவசாயிகள் மீனவா்கள், உப்பளங்கள், இரால் பண்ணைகள், தென்னை, சவுக்கு, மாமரம் வாழை, புளியமரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

 சேத மதிப்பீடு கணக்கெடுப்பு நியாயமான முறையில் அரசு அதிகாரிகள் எல்லா இடங்களிலும் மக்கள் பாதிப்பை உணா்ந்து முறையாக சரியாக ஆய்வு செய்து, வீடு இழந்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் அனைவருக்கும் நவீன வசதிகளுடன் கூடிய காங்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். 

டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. ஒரு தென்னை மரத்திற்கு ரூ 25,000 முதல் 30,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்.

 கால்நடைகளை இழந்தவா்களுக்கு, மீனவா்களுக்கு, உப்பள தொழிலாளா்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

 அரசு கணக்கீட்டை முறையாக செய்து மத்திய அரசுடன் பேசி உண்மையான நஷ்டத்திற்கு ஏற்றவாறு தொகையை பெற்று மக்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.

 மத்திய அரசு எந்த புயலுக்கும் சரியாக நிதி உதவியை கொடுக்கவில்லை சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கஜா புயல் வலுவாக தாக்கியிருக்கிறது அதை உணா்ந்து மத்திய அரசு தமிழக அரசு கேட்கக் கூடிய நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுப்பை விரைவாக நடத்தி அந்தந்த பகுதியில் குழு அமைத்து நியாயமான முறையில் நிவாரணத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com