சென்னைக்கு மழை வருமா? வராமல் ஏமாற்றுமா?

கஜா புயலைப் போல தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விதான் சென்னைவாசிகளின் முதல் கேள்வியாக இருக்கிறது.
சென்னைக்கு மழை வருமா? வராமல் ஏமாற்றுமா?


சென்னை: கஜா புயலைப் போல தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விதான் சென்னைவாசிகளின் முதல் கேள்வியாக இருக்கிறது.

இது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி கடலூர் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறும் என்பதற்கு உறுதியான வாய்ப்பு இல்லை. இது தற்போது தமிழகத்துக்கு சாதகமாகவே உள்ளது.

இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலை கன மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது 22ம் தேதி வரை நீடிக்கும். மீண்டும் 23ம் தேதி முதல் மழை படிப்படியாகக் குறையும். 

வழக்கமாக வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சென்னைக்கு 850 மி.மீ. மழை பெய்யும். இந்த நாள் வரை வெறும் 225 மி.மீ. மழைதான் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 3 நாட்கள் சென்னைக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். ஒருவேளை இந்த மழையை சென்னை இழக்குமானால், நிச்சயம் அதிக சிரமத்துக்குள்ளாகும். 

அதே சமயம் இந்த ஒரு மழையால் மட்டும் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை நிரப்பிவிட முடியாது. இதற்குப் பிறகு மேலும் இதுபோன்றதொரு மழை சென்னைக்குத் தேவைப்படுகிறது. இன்று காலை மழை பெய்யவில்லை என்றாலும், இன்று இரவு மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, யாரும் சென்னையில் இன்னும் மழை இல்லை என்று புலம்பாதீர்கள்.

கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் மழை நீர் சேகரிப்பின் மூலம் சுத்திகரித்த சேமித்து வையுங்கள்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 20, 21ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இன்று இரவு சென்னைவாசிகள் மனம் குளிரும் வகையில் வலுவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மழையைக் கொடுக்கும் என்று நம்புவோம்.. நம்பிக்கை அதானே எல்லாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com