எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு கோ.புதுப்பட்டி பகுதியில் கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு கோ.புதுப்பட்டி பகுதியில் கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறவுள்ளன.
 கோ.புதுப்பட்டியில் வருவாய்த்துறையினர் வசம் உள்ள பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு, 198.27 ஏக்கர்  நிலத்தினை சுற்றி எல்லைப்பகுதியில் கொடிகளை நடப்பட்டுள்ளன.
  மின் வாரியத்துறையினர் இந்த இடத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்ம்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எய்ம்ஸ் கட்டுமானக் குழுவினரும் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இங்கு கூடுதலாக வருவாய்த்துறையினர் வசமுள்ள இடத்தில் "பஸ்போர்ட்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வும் நடைபெற்று வருகிறது. 
 இந்நிலையில், கட்டுமானக் குழுவினர் 197.28 ஏக்கர் நிலம் தவிர்த்து கூடுதலாக 20 ஏக்கர் நிலம் வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் கேட்டுள்ளனராம். அதன்பேரில் வருவாய்த்துறையினர் பஸ்போர்ட்க்காக ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து 20 ஏக்கர் இடத்தை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com