சிலை கடத்தல் வழக்கு: ஜாமீன் மனு தள்ளுபடி

சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா. இவரது வீடு, பண்ணை வீடுகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து, ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகள் மற்றும் கருங்கல் தூண்களைக் கைப்பற்றினர். இந்நிலையில் அவரது நண்பரான சென்னை திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் வசிக்கும் தீனதயாளன் (38) அக்டோபர் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வி. சிவஞானம் திங்கள்கிழமை விசாரித்து தள்ளுபடி செய்தார்.
இதே நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னையைச் சேர்ந்த தயாநிதி ஸ்வைன், சக்திவிநாயகம், சதீஷ், பிரகாஷ், அஜி, ரஞ்சித்சன்வால், தேவேந்திரன், சிவா, ராஜதேவ், அருண்கிறிஸ்டி, ராஜேஷ் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com