தமிழ்நாடு

புயல் நிவாரணப் பொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

DIN


'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான பொருட்களை தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தாக்கியா கஜா புயலானது டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கடுமையான சேதத்தினை உண்டாகியுள்ளது. உயிர் சேதங்களை விடவும் கடுமையான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன அதற்கான நிவாரணப் பணிகளும் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

'கஜா' புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மின்சாரம், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிவாரணப் பணிகளில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிவாரணப் பொருட்களை அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்லும்போது அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது கட்டணம் வசூலிப்பது சரியல்ல என்றும், சூழலை உணர்ந்து நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, நிவாரணப் பொருட்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15.11.2018 அன்று 'கஜா' புயலால் தமிழகத்தில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. முதல்வர் பழனிசாமியின் ஆணைக்கிணங்க புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான பொருட்களைத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.  

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல உரிய உதவிகளை செய்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT