மோசமான வானிலையால் முதல்வரின் புயல் பாதிப்பு ஆய்வு பயணம் பாதியிலேயே ரத்து

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார் முதல்வர் பழனிசாமி.
மோசமான வானிலையால் முதல்வரின் புயல் பாதிப்பு ஆய்வு பயணம் பாதியிலேயே ரத்து

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார் முதல்வர் பழனிசாமி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர்  மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளானது. ஏராளமான வீடுகள், விளைநிலங்கள், பொருட்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் சேதமடைந்தன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து போர்கால அடிப்படையில் நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து காலை 5.45 -க்கு விமானத்தில் திருச்சி சென்றார். அங்கிருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் மச்சுவாடி, மாப்பிளையார்குளம் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகள் முதல்வருக்கு புயல் சேதம் குறித்து விளக்கினர். 

பின்னர் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவிகளை அளித்தார். 

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக முல்வர் பழனிசாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

புயல் பாதித்த நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மழையால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து முதல்வரின் ஆய்வு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி திருவாரூரிலிருந்து திருச்சிக்கு திரும்பி வந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com