சென்னையை கலகலக்க வைக்கக் காத்துக் கொண்டிருக்கும் கருமேகக் கூட்டம்!

சென்னைவாசிகள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மழை ஒருவழியாக வந்தே விட்டது.
சென்னையை கலகலக்க வைக்கக் காத்துக் கொண்டிருக்கும் கருமேகக் கூட்டம்!


சென்னை: சென்னைவாசிகள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மழை ஒருவழியாக வந்தே விட்டது.

மழை பெய்துவிட்டால் நாம் சும்மா இருந்து விடுவோமா என்ன? கன மழையாக இருக்குமா? இன்று நாள் முழுவதும் மழை பெய்யுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளோடு ஆன்லைனுக்கு வந்துவிட மாட்டோமா?

இதற்கெல்லாம் தமிழ்நாடு வெதர்மேன் ஏற்கனவே தயாராக உள்ளார். சென்னைவாசிகளின் மழை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்குமான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை - புதுச்சேரி இடையே இன்று கரையைக் கடக்க உள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள். குறிப்பாக சென்னைக்கு. அதுமட்டுமல்லாமல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மழைக்கான நாள் என்று சொல்லலாம். சென்னையில் அவ்வப்போது காற்றும் வீசும்.

சென்னைக்கு மிக அருகே ஒரு கருத்த மேகம் தயாராகி வந்து கொண்டிருக்கிறது. சென்னையைக் கலகலக்க வைக்க அது தயாராக உள்ளது. தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையை ரசியுங்கள். கொண்டாடுங்கள். இது நேரம் செல்ல செல்ல கன மழையாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும். தெற்கு சென்னையும், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு அதி கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த வட தமிழகப் பகுதிகளும் மழையைப் பெறும். இதனால் கடலூர் ஒருவேளை மழையை பெறாமல் போகலாம்.

காற்றின் வேகம்
சென்னையில் இருந்து புதுச்சேரி வரையிலான பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

அதிக மழை பொழிவுக்கான வாய்ப்பிருக்கும் பகுதிகள்
சென்னையின் தெற்குப் பகுதிகள், தாம்பரம், காஞ்சிபுரம், ஒரகடம் பகுதிகள், கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் பகுதிகளுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com