பழனியில் நாளை திருக்கார்த்திகைத் திருவிழா

பழனி மலைக்கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (நவ.23) கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 
பழனியில் நாளை திருக்கார்த்திகைத் திருவிழா


பழனி மலைக்கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (நவ.23) கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த நவ.17 ஆம் தேதி காப்புகட்டுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் மாலை சண்முகார்ச்சனை மற்றும் சண்முகர் தீபாராதனை நடைபெற்று வருகிறது. 
முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல் வியாழக்கிழமை (நவ.22) நடைபெறுகிறது. சாயரட்சை பூஜை முடிந்த பிறகு மூலஸ்தானத்திலும், பின்னர் நான்கு திசைகளிலும் பரணி தீபம் ஏற்றப்படும். 
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் நான்கு திசைகளில் உள்ள பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மலைக்கோயில் முன்பு உள்ள தீபஸ்தம்பத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதலும், அதைத் தொடர்ந்து சொக்கப்பனை எரித்தலும் நடைபெறும்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மலைக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மலைக்கோயிலைத் தொடர்ந்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com