தமிழ்நாடு

குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை

DIN


குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததை அடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி செம்மண் நிறத்துடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதையடுத்து, குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கு போலீஸார் தடைவிதித்தனர். இதனால், ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் குளித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT