தமிழ்நாடு

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து விரிவான அறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

DIN

சென்னை: கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல்  செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தை கடந்த 16-ந்தேதி தாக்கிய கஜா புயலினால் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும்  நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. முதல்கட்ட நிவாரணப் பணிகளுக்காக ரூ. 1000 கோடியினை விடுவித்த மாநில அரசானது, மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி  நிதியுதவி கோரிள்ளது. பின்னர் மத்திய குழு ஒன்று 3 நாட்களாக புயல் பாதித்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தது.  தற்போது மத்திய அரசு வழங்க உள்ள நிதியுதவி குறித்து எதிர்பார்த்து நிலவி வருகிறது. 

இந்நிலையில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல்  செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலைச்செல்வன் என்பவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கஜா புயல் தாக்குதலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு கோரி இருந்தார். 

அவர் தனது மனுவில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரம் ஒன்றுக்கு தலா ரூ.2000 தமிழக அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது போதாது. மரம் ஒன்றுக்கு ரூ.25000 வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவானது வெள்ளியன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றமானது, இந்த வழக்கினை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT