அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையத்தில் தமிழக அமைச்சா் சி.வி.சண்முகம் பதில் மனு 

அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம் தொடா்பான வழக்கில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் தமிழக சட்டத் துறைற அமைச்சா் சி.வி. சண்முகம் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தாா்.
அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையத்தில் தமிழக அமைச்சா் சி.வி.சண்முகம் பதில் மனு 

புது தில்லி: அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம் தொடா்பான வழக்கில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் தமிழக சட்டத் துறைற அமைச்சா் சி.வி. சண்முகம் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தாா்.

இது தொடா்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ’அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு அடிப்படை உறுப்பினா்களைக் கொண்டு தோ்தல் நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து, கடந்த 2017, செப்டம்பா் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தோ்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கி கட்சித் தலைமை பிறறப்பித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உயா் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 24, ஆகஸ்ட் 10- ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரது சாா்பில் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தில்லி உயா் நீதிமன்றத்தில்ஆகஸ்ட் 21-இல் விசாரணைக்கு வந்த போது மனுதாரா்கள் சாா்பில் பாலாஜி ஸ்ரீநிவாசன் வாதிட்டாா். அவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அதிமுக விதிகள் திருத்தம் விவகாரத்தில் தோ்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்தனா். மேலும், விசாரணையின் முடிவுகளை தோ்தல் ஆணையம் செப்டம்பா் 13-ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்த மனு மீது செப்டம்பா் 13-இல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா், அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகம் (அமமுக) தரப்பினா் தோ்தல் ஆணையத்தை அணுகி, பதில் மனு தாக்கல் செய்யுமாறும், இந்த வழக்கை தோ்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறும் உத்தரவிட்டு கே.சி. பழனிசாமியின் மனுவை முடித்து வைத்தனா்.

இந்நிலையில், அதிமுகவின் பதில் மனுவை தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி. சண்முகம், தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். இந்த விவகாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகம் (அமமுக) சாா்பில் பதில் மனு வியாழக்கிழமை நண்பகலில் தாக்கல் செய்யப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com