துபை புறப்பட்ட விமானத்தில் பழுது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபைக்கு புறப்பட்ட விமானத்தில் பழுது உடனடியாக கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 8 பயணிகளுடன்
பழுதுகாரணமாக திருச்சி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம்.
பழுதுகாரணமாக திருச்சி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம்.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபைக்கு புறப்பட்ட விமானத்தில் பழுது உடனடியாக கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 8 பயணிகளுடன் புதன்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றது. 
திருச்சியிலிருந்து புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் துபைக்கு செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்ரபிரஸ் விமானம் ஓடுதளத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அப்போது, விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் 82 பேரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு நிலைய வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் முயன்றும் சரிசெய்ய முடியவில்லை. இதற்கிடையில், சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு அதிகாலை 2.30க்கு வந்து 3.20க்கு மீண்டும் சார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தில், காத்திருந்த பயணிகளில் 60 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பழுதான விமானம் சரிசெய்யப்பட்டதையடுத்து, மாலை 5.40க்கு திருச்சியில் இருந்து துபைக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் எஞ்சியிருந்த 22 பயணிகளில் 14 பேர் பயணத்தை ரத்து செய்ததால், 8 பேர் மட்டுமே விமானத்தில் துபை சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com