மாவோயிஸ்டுகள் தாக்குதலை எதிர்கொள்ள அதிரடிப் படையினருக்கு குன்னூரில் பயிற்சி

மாவோயிஸ்டுகள் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து அதிரடிப் படையினருக்கு குன்னூரில் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
பயிற்சி அளிக்கும் துணை ஆய்வாளர் சுரேஷ்.
பயிற்சி அளிக்கும் துணை ஆய்வாளர் சுரேஷ்.


மாவோயிஸ்டுகள் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து அதிரடிப் படையினருக்கு குன்னூரில் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு - கேரள மாநில எல்லையோரங்களில் கடந்த சில தினங்களாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாலக்காடு, மலப்புரம், வயநாடு வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் பதுங்கியுள்ளதாக போலீஸார் கூறிவருகின்றனர். 
இந்நிலையில் கேரள எல்லையோரப் பகுதிகளில் நடமாடும் மாவோயிஸ்டுகள் நீலகிரி வனப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
கடந்த 5-ஆம் தேதி கேரள மாநிலம், அட்டப்பாடி புதூர் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த மாவோயிஸ்ட் இயக்கப் பிரமுகர் டேனிஷ் என்பவரை அகழி போலீஸார் கைது செய்து விசாரித்தனர். 
அதில் அவர், கோவை, ராமநாதபுரத்தில் வசித்தவர் என்பதும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொரில்லா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்துக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவதைத் தடுக்கவும், தமிழ்நாடு - கேரள மாநில எல்லையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். 
மேலும், குன்னூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் குன்னூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் அதிரடிப் படையினர் ஆகியோருக்கு மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து அதிரடிப்படை காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் தலைமையில் துணை ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர். 
இதில் அதிவிரைவுப் படை , நக்ஸல் தடுப்புப் பிரிவு படையைச் சேர்ந்த போலீஸார் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com