வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

குரூப் 2 பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப்.9 கடைசி

DIN | Published: 04th September 2018 02:23 AM

குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9 -ஆம் தேதி கடைசியாகும். 
சமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதியில் 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 10 -ஆம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9 -ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின், இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கி மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வரும் 11 -ஆம் தேதி கடைசியாகும். குரூப் 2 -க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 11 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

More from the section

அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் கெடு விதித்த மு.க.ஸ்டாலின்
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்
பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக வரலாறு குறித்து பேசலாமா?: தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது: வைகோ
நான் எதற்கும் பயந்து ஓடிப்போகிறவன் கிடையாது: கருணாஸ்