வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

துணை மருத்துவப் படிப்புகள்: செப்.10 முதல் விண்ணப்ப விநியோகம்

DIN | Published: 07th September 2018 02:26 AM


பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்.10) தொடங்க உள்ளது.
15 படிப்புகள்: பி.எஸ்சி. நர்சிங், ரேடியோதெரபி டெக்னாலஜி, கண் மருத்துவம், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், பி.பார்ம், பிபிடி (இயன்முறை மருத்துவம்), பிஓடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு) உள்ளிட்ட 15 துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற உள்ளது.
மொத்த இடங்கள்: இந்தப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 600 -க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 7,500 -க்கு மேற்பட்ட இடங்களும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாக இடங்களும் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி இந்தப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 
விண்ணப்ப விநியோகம்: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமையுள்ள மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேடு ஆகியவற்றின் விநியோகம் திங்கள்கிழமை முதல் (செப்.10) நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவிறக்கம்: இதுதவிர www.tnhealth.org www.tnmedicalselection.org  ஆகிய இணையதங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.400. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழின் சான்றொப்பமிட்ட இரண்டு நகல்களைக் சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
செப். 19 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு செப்டம்பர் 20 -ஆம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

More from the section

கஜா புயல் எதிரொலி: ரயில்கள், சிறப்புக்கட்டண ரயில்கள் ரத்து
"ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்': ஹெச்.ராஜா
பழுது பார்ப்பதற்காக திருச்சி சென்ற மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் வந்தடைந்தது
கஜா புயல் எதிரொலி: பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
கஜாபுயல் எதிரொலி: பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்