சனிக்கிழமை 17 நவம்பர் 2018

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

DIN | Published: 11th September 2018 01:41 PM

தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உள்ளாட்சித் துறையின் விதிகளை மீறி யாருக்கும் டெண்டர் அளிக்கப்படவில்லை. உலக நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளனர். 

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா?. முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. 

அதிமுகவை முடக்க ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் பலிக்காது. தமிழக உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு விருது வழங்கி பாராட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

 

More from the section

கஜா புயல்: கொடைக்கானலில் மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக அதிகரிப்பு
சென்னையில் ஆயிரம் கிலோ நாய்க்கறி பறிமுதல்
புயல் பாதித்த பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
யாரும் எதிர்பாராதவகையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் திடீர் மழை