புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

குற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியாகிவிட முடியாது: அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி குறித்து முதல்வர் பதில்

DIN | Published: 11th September 2018 02:12 PM

குற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியாகிவிட முடியாது என்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி குறித்து கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும். தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்; அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை. 

பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்; மாநில அரசால் குறைக்க முடியாது. மாநில அரசு குறைத்தால் திட்டங்களை நிறைவேற்ற நிதி பாதிப்பு ஏற்படும். 

தமிழகத்தில் பல திட்டங்கள் நிறைப்பட உள்ளன. திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் உதவி தேவை. நிதியுதவி செய்பவர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 

More from the section

தருண் அகர்வால் குழுவிடம் முறையிட வேதாந்தா குழுமத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
பாம்பனில் ரூ.35 கோடியில் புதிய ரயில் தூக்குப் பாலம்
உப்பூர் அனல் மின்நிலைய திட்டம்: விவசாயிகள், மீனவர்கள் கடும் எதிர்ப்பு 
சிவன்மலையில்  ஆண்டவன் உத்தரவு' செம்மண் வைத்து சிறப்பு வழிபாடு
மேட்டூர் அணை நீர்மட்டம் 111.42 அடி