வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

சிலைக்கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: தனது கருத்தை தெரிவிக்குமாறு சிபிஐக்கு உத்தரவு

DIN | Published: 11th September 2018 01:20 PM

 

சென்னை: சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு எடுத்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கூறினர். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு, வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளது. ஆவணங்களை நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்வதாகக் கூறியது.

மேலும், கும்பகோணத்தில் உள்ள வழக்குகளை மட்டுமே பொன் மாணிக்கவேல் குழு விசாரிக்கும் என்றும், வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கவே சிபிஐக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டது.

இதையடுத்து, சிலைக் கடத்தல் வழக்குகள் மாற்றப்பட்டது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்குமாறு சிபிஐ தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

More from the section

கஜா புயல் இன்று கரையைக் கடக்கிறது: 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று, கனமழை எச்சரிக்கை
பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு
புற்றுநோய்க்கு மருந்தாகும் சீதா பழம்!
6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாற்றுத்திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கைக்கு கமல் பாராட்டு