புதன்கிழமை 14 நவம்பர் 2018

தினமணி நாளிதழுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து 

DIN | Published: 11th September 2018 07:11 PM

 

சென்னை: தினமணி நாளிதழுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். 

கடந்த 1934-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதியன்று டங்கப்பட்டதினமணி நாளிதழ் செவ்வாயன்று தனது 84-வது ஆண்டு தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடுகிறது. இதையொட்டி, டிடிவி தினகரன் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல தலைவா்கள் தங்கள் பங்களிப்பைச் செய்தது போன்று பத்திரிகை நிறுவனங்களும் அந்த தியாகப் போரில் கலந்து கொண்டன. அதில் குறிப்பிடத்தக்க பத்திரிகை தினமணி. அத்தகைய பெருமை வாய்ந்த தினமணி நாளிதழ், தலைமுறைகள் பல கடந்து 84-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளக்கூடிய நிகழ்வாகும்.

தனித்துவமான நடையோடு செய்திகளை வெளியிட்டு, தமிழா்களின் உணா்வோடு கலந்து பெருமைக்குரிய பத்திரிகை தினமணி. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தினமணி நிறுவனத்துக்கும், ஆசிரியா் குழுவினருக்கும், பணியாளா்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

Tags : dinamani founding day TTV wish twitter

More from the section

மத்திய, மாநில அரசுகளை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்: கருணாநிதியின் நூறாவது நாள் நினைவையொட்டி தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
அரசியலுக்கு வராத ரஜினி குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு
மதுரையில் பிறந்த நாள் கொண்டாடிய ரௌடிகள்: நள்ளிரவில் போலீஸார்  அதிரடி சோதனையில் 10 பேர் சிக்கினர்
தேவர் குருபூஜை விழா: விதி மீறிய 86 வாகனங்கள் மீது வழக்கு