திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

அனுமதியின்றி போராட்டம்: திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்கு

DIN | Published: 12th September 2018 01:37 AM


சென்னை சேப்பாக்கத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை அழைப்பு விடுத்தது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இந்தப் போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். இந்தப் போராட்டம் காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்றதாக தெரிகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின்கீழ் திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

More from the section

எம்எல்ஏ கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் மனு
திருச்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கு ஒருநாள் முன்பு வழங்கப்பட்ட கணிணி பாடப்புத்தகம்
குட்கா, புகையிலை பொருள்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்: திருவள்ளூர் ஆட்சியா் எச்சரிக்கை
உடல் நலக்குறைவு: திருமுருகன்காந்தி மருத்துவமனையில் அனுமதி
செல்போன் திருடியதாக சிறுவன் கொலை: நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்